Published : 14 Mar 2016 10:18 AM
Last Updated : 14 Mar 2016 10:18 AM

மத்திய சிறை, மகளிர் சிறைகளில் மெட்டல் டிடெக்டர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், மகளிர் சிறப்பு சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. கைதிகள், சிறை ஊழியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சென்னை புழல் (1 மற்றும் 2), வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, கோயம்புத்தூர், பாளையங் கோட்டை ஆகிய இடங்களில் 9 மத்திய சிறைகளும், திருச்சி, வேலூர், புழல் ஆகிய 3 இடங்களில் மகளிர் சிறப்பு சிறைகளும் உள்ளன. வெடி பொருட்கள், ஆயுதங்கள், செல் போன்கள் உள்ளே கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் விதமாக மேற்கண்ட அனைத்து சிறைகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழக சிறைத் துறை உயரதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சிறைகளுக்காக ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் 12 மெட்டல் டிடெக்டர் கருவிகள் வாங்கி பொருத்தப்பட உள்ளன. சிறைக்கு கொண்டு வரப்படும் கைதிகள் செல்போன், ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளனரா என தற்போது ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்படுகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தால் இது போன்ற தர்மசங்கடங்கள் தவிர்க் கப்படும்.

மேலும், கைதிகளின் உறவினர் கள், நண்பர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களில் செல் போன், சிம்கார்டு, சிறு ஆயுதங் களை மறைத்து எடுத்துவந்து கொடுத்துவிட்டுப் போவதும் சில நேரம் நடக்கும். மெட்டல் டிடெக்டரால் சோதனை செய்யப் பட்ட பிறகே, உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படும் என்பதால், சிம்கார்டு, ஆயுதங்கள் போன்ற வற்றை மறைத்து உள்ளே அனுப்ப இனி இயலாது. எனவே, சிறைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

இந்த சிறைகளில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களும் நிறுவப்பட உள்ளன. ரூ.52 லட்சம் மதிப்பில் எதிர்சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திக ரிக்கும் 12 இயந்திரங்கள் பொருத் தப்பட உள்ளன. 9 மத் திய சிறை களில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங் களும், மகளிர் சிறை களில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களும் பொருத்தப்பட உள்ளன. கைதிகள், சிறை ஊழியர் களுக்கு இனி பாதுகாப்பான, சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக் கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ரூ.52 லட்சம் மதிப்பில் எதிர்சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் 12 இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x