Published : 24 Dec 2021 10:57 AM
Last Updated : 24 Dec 2021 10:57 AM
ஸ்மார்ட் சிட்டி பணிகளில் வீணாகும் கட்டிடக் கழிவுகள், தார்ச் சாலை கழிவுகள் வைகை ஆற்றில் கொட்டப்படுவதால் ஆற்றின் வழித் தடம் சீராக இல்லாமல் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் கட்டிடக் கழிவுகளை வைகை ஆற் றில் கொட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் புதிய சாலைகள் அமைக்கும்போது ஏற்கெனவே இருந்த தார்ச் சாலை கழிவுகளைப் பெயர்த்து எடுத்து ஆற்றில் கொட் டுவதாகவும் கூறப்படுகிறது.
வைகை ஆற்று வழித்தடத்தில் கட்டிடக் கழிவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இதனால் ஆற்றில் நீரோட்டம் சீராக இல்லாமல் கட்டிடக் கழிவுகள் இல்லாத பக்கம் தண்ணீர் ஓடு கிறது. மற்ற இடங்களில் தண்ணீர் ஓடாததால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து வைகை நதி மக் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:
மதுரை குருவிக்காரன் சாலை பாலத்தை இடித்து அதன் கழி வுகளைப் பாலத்தின் அருகே யும், ஒபுளா படித்துறை பாலத்தை இடித்து தடுப்பணை அருகேயும் கொட்டி உள்ளனர்.
விளாங்குடி பாலம் பெத் தானியாபுரம் பகுதியில் தார் சாலையைப் பெயர்த்து கழிவுகளை ஆற்றின் கரையில் மேடாக அமைத்து கார் நிறுத்தம் மற்றும் ஒர்க்ஷாப் அமைத்துள்ளனர்.
கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரல், அம்மி, குழவி, பழைய கற்களை ஆங் காங்கே ஆற்றில் குவித்து வைத் துள்ளனர். இதனால் வைகை ஆறு ஒரே சீராக இல்லாமல் மேடு, பள் ளமாக உள்ளது.
ஏற்கெனவே ஆற்றின் இரு கரையோரம் சிமெண்ட், தார்ச் சாலை அமைத்து ஆற்றின் இயற்கை சூழல் மாறி வருகிறது.
எனவே கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தடுக்கவும், கொட் டிய கழிவுகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் உடனே நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT