Published : 23 Dec 2021 08:56 AM
Last Updated : 23 Dec 2021 08:56 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயி லை சுற்றியுள்ள பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமை யான கட்டிடங்களை கணக் கெடுத்த மாநகராட்சி, தற்போது வரை அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவி க்கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயி லை சுற்றி ஏராளமான பழமையான கட்டிடங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் அந்த கட்டிடங்களை வீடுகளாக பயன்படுத்தி வசித்து வந்தனர். தற்போது அதன் மதிப்பு பல கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வர்த்தக ரீதியாக கட்டிட உரிமையாளர்கள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலான கட்டி டங்கள் சீரமைக்கப்படவில்லை. அதனால் அடிக்கடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுகின்றன.
கடந்த ஓராண்டுக்கு முன்பு விளக்குத்தூண் பகுதியில் ஜவு ளிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கட்டிடம் இடிந்து விழுந்து உயி ரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதில் இடிந்து விழும் நிலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தது. அதை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்திய போதும், எப்போதும்போல் அக்கட்டிடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் தற்போது கீழவெளி வீதியிலுள்ள பழமை யான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்தார்.
ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந் தால், இதுபோன்ற விபத்து களை தவிர்த்திருக்கலாம். இனி மேலாவது மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT