Published : 09 Mar 2016 07:54 AM
Last Updated : 09 Mar 2016 07:54 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மக்கள் நலக் கூட்டணி இடையேதான் போட்டி நிலவும். திமுக 3-வது இடத்துக்கு தள்ளப் படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணியின் மூன்றாம் கட்ட பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பிய நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
3 கட்ட பிரச்சாரம் முடித்துள் ளீர்கள். மக்களின் மன ஓட்டம் எப்படி உள்ளது?
ஊழலுக்கு எதிரான பெரும் கோபம் மக்களிடம் நிலவுகிறது. அதனாலேயே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேண் டாம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதை உணர முடிகிறது. அதேநேரத்தில் எங்கள் கூட்டணி வலுவடைந்து வருகிறது.
திமுக, அதிமுகவை நிராகரிப்பவர்கள் உங்களை ஆதரிப்பார்கள் என்று எப்படி கூற முடியும்?
எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகம் ஆகி விட்டது. இந்த நிலைமைக்கு திமுக வும், அதிமுகவும்தான் காரணம் என்ற கோபம் மக்களிடம் காணப் படுகிறது. மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் மாசற்றவர்களாக உள் ளனர். ஊழலுக்கு எதிராக பேசும் தகுதி எங்களுக்கு மட்டுமே உள் ளது. மக்கள் நலக் கூட்டணியே தமிழகத்தின் மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது.
உண்மையான மாற்று நாங்கள்தான் என்று பாமக கூறி வருகிறதே?
இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.1,800 கோடி ரொக்கமும், 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப் பட்டன. அந்த நேரத்தில் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ். தகுதியே இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு என்ற குற்றச்சாட்டை அன்புமணி மீது சிபிஐ சுமத்தியுள்ளது. அது தொடர்பான வழக்கை தற்போது அவர் எதிர்கொண்டுள்ளார். இந்தச் சூழலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றான, ஊழலுக்கு எதிரான சக்தியாக பாமகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இதற்கு முன்பு திமுக, அதிமுகவுடன் நீங்கள் மாறி மாறி கூட்டணி வைத்தீர்களே?
இதுவரை நடந்த தேர்தல்களில் அன்றைய கால சூழலுக்கு ஏற்ப திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக அதிமுகவுடனும், அதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக திமுகவுடனும் சேர்ந்து போட்டியிட்டோம். அதாவது யார் வரக் கூடாது என்பதுதான் எங்கள் பிரதான நோக்கமாக இருந்தது. இப்போது திமுக, அதிமுக ஆகிய இரண்டு சக்திகளும் ஒரே நேரத்தில் வீழ்த்தப்பட வேண்டியது அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
எவ்வளவு மோசமான சூழலிலும் திமுக, அதிமுக கட்சிகளின் வாக்கு 20 சதவீதத்துக்கு குறையாது. உங்கள் கூட்டணியின் வாக்கு இரட்டை இலக்கத்தை தொடுமா என்பதுகூட சந்தேகமாக உள்ளதே?
திமுக, அதிமுகவுக்கு நிரந்தர வாக்கு வங்கி இருப்பது உண்மை தான். எங்களது வாக்கு வங்கி சதவீதம் சொற்பமானது என்பதும் உண்மையே. ஆனால் முன்னெப் போதும் இல்லாத வகையில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரும் அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்த அலை நாளுக்கு நாள் வலுவடைந்து வாக்குப்பதிவு நாள் நெருங்கும்போது பேரலையாக வீசும். அப்போது திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் நிரந்தர வாக்கு வங்கி என்பது வெறும் மாயை என்பது தெளிவாகும். பழைய வாக்கு வங்கி கணக்குகளை மட்டுமே வைத்து கொண்டு திமுக, அதிமுகவால் கரை சேர முடியாது.
திமுகவும், அதிமுகவும் அந்த அளவுக்கு பலவீனமாகி விட்டதாக தெரியவில்லையே?
இதற்கு முன்பு எங்களைப் போன்ற கட்சிகள் திமுக, அதிமுக வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். தொகுதி உடன்பாடு பேச்சுவார்த் தைக்காக அந்தக் கட்சிகளிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என எங்களைப் போன்றவர்கள் காத்திருந்த காலம் உண்டு. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஓராண்டுக்கும் மேலாக திமுக முயற் சிக்கிறது. தேர்தல் தேதியும் அறி விக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும்கூட தேமுதிகவுடன் கூட்டணி உண்டா என்பதை திமுக வால் உறுதி செய்ய முடியவில்லை. தேமுதிகவின் அழைப்புக்காக மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய பரிதாபமான நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு கிடுகிடுவென வேட்பாளர் பட்டியலை அறிவித்து, பிரச் சாரத்தையும் தொடங்கி விடும் அதிமுக, வழக்கத்துக்கு மாறாக இப்போது எதிர் அணியின் முடிவுக் காக காத்திருக்கிறது. இவையாவும் தமிழக தேர்தல் களத்தின் புதிய காட்சிகள். அதாவது திமுக, அதிமுக வேகமாக பலவீனமடைந்து வருவதைக் காட்டும் காட்சிகள்.
குறிப்பாக திமுகவின் செல் வாக்கு வேகமாக சரிந்து வருகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையேதான் பிரதானப் போட்டி இருக்கும். திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படுவது நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT