Published : 22 Dec 2021 09:46 AM
Last Updated : 22 Dec 2021 09:46 AM
திருநாவலூர் கெடிலம் ஆற்றில் இருந்து காவல்துறையினரின் உடந்தையோடு மணல் கடத்தல் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட உடையனந்தல், சேந்த நாடு, களத்தூர், திருநாவலூர், கிழக்கு மருதூர் ஆகிய கிரா மங்களை ஒட்டிச் செல்லும் கெடி லம் ஆற்றல் இருந்து இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
இதையறிந்த உளுந்தூர் பேட்டை டிஎஸ்பி மணிமொழியான் தலைமையிலான போலீஸார் அவ்விடங்களை பார்வையிட்டு, ஆற்றுப் பகுதிக்கு வாகனங்கள் செல்லாத வகையில் வாய்க்கால் வெட்டினர். இருப்பினும் வாய்க்காலை மூடிய மணல் கடத்தல் காரர்கள் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிவிற்பனை செய்து வருவதாகவும், இதற்கு காவல் துறையினரில் ஒரு பிரிவினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உடந்தையாக செயல்படவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறு கின்றனர்.
இதுகுறித்து டிஎஸ்பி மணிமொழியானிடம் கேட்டபோது, “மணல் கடத்தல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இருப்பி னும் தொடர்ந்து கடத்தல் நடை பெறுவதாக தகவல் வருகிறது. மணல் கடத்தலைக் காணும் பொதுமக்கள் அந்த தகவலை பகிர்ந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT