Published : 16 Jun 2014 09:55 AM
Last Updated : 16 Jun 2014 09:55 AM

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கிரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ் ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கனிமொழி. இவர்க ளுக்கு திலிப்குமார் என்ற மகனும், நெல்சன் பிரியதர்ஷினி (24) என்ற மகளும் உள்ளனர்.

நெல்சன் பிரியதர்ஷினியின் பெற் றோர் ஏழ்மை நிலையில் இருந் தாலும் அவர்களின் மகளை சாதனை படைக்க வேண்டுமென்ற லட்சியத் துடன் வளர்த்தனர். பட்டப்படிப்பு முடித்தவுடன் தனியார் வங்கியில் பணியில் இருந்தவாறே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரான பிரியதர்ஷினி, தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து நெல்சன் பிரிய தர்ஷினி கூறியதாவது: முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சத்தியமங்கலம் தனியார் பள்ளியி லும், பின் கோவை கல்லூரியிலும் படித்துவிட்டு, தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தேன். சிறுவயது முதலே எனது தந்தை, தாய் மற்றும் தாய்மாமா புவியரசு ஆகியோர் என்னை நன்கு படித்து கலெக்டராக வேண்டும் என கூறிவந்தனர். அத னால் எனக்கு ஐஏஎஸ் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இளங்கலை படிப்பு முடித்தபின் பணியில் சேர்ந்துவிட்டாலும், ஐஏஎஸ் படிப்பதற்கான அடிப் படை தகுதித் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இதன்பின் எனது குடும்பத்தினரும், வங்கி மேலாள ரும் தொடர்ந்து படிக்குமாறு ஊக்க மளித்தனர். பின்னர் விடாமுயற்சி யுடன் இதற்கான புத்தகங் களை சேகரித்தும், இணையதளங்க ளில் உள்ள பாடங்களைப் படித் தும் ஐஏஎஸ் தேர்வெழுதினேன். தற்போது, 88-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டு மென்ற விருப்பம் நிறைவேறி யதில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x