Published : 03 Mar 2016 03:00 PM
Last Updated : 03 Mar 2016 03:00 PM
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில டிக்ஸனரிகளை (அகராதிகள்) அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் திமுகவினர் நேரில் விநியோகித்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் டிக்ஸனரிகளை விநியோகித்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள 33 அரசு, தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர் அனைவ ருக்கும் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் கூறியது:
மு.க.ஸ்டாலின் புகழை மாணவர்கள் மூலம் பெற்றோர் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டோம். இதற்காக கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு, மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள மாணவர்களை கணக்கெடுத்து டிக்ஸனரிகளை வழங்கினோம்.
டிக்ஸனரியிலுள்ள அட்டைப் படத்தை நீக்கிவிட்டு நாங்கள் பிரத்யே கமாக தயாரித்த அட்டைப் படத்தை இணைத்தோம். அதில், ‘வருங்கால தமிழகத்தின் தளபதி அவர்களின் 64-ம் ஆண்டு பிறந்த நாள் பரிசு’ என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மதுரை வடக்கு மாவட்ட செயலர் பி.மூர்த்தி ஆகியோரின் படங்கள், உதயசூரியன் சின்னத்துடன் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த அகராதிகளின் மதிப்பு ரூ.27 லட்சம். மேலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஓரிரு நாளில் வழங்க திட்டமிட்டுள்ளோம்’என்றார்.
இந்நிலையில் திமுகவினர் டிக்ஸனரி களை வழங்கிய தகவல் அறிந்து பல பள்ளிகளின் நிர்வாகம் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT