Published : 20 Dec 2021 10:06 AM
Last Updated : 20 Dec 2021 10:06 AM
நாமக்கல்: சொத்து குவிப்பு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், கடந்த வாரம் தமிழகம் மற்றும் ஆந்திராவில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார். இதில் பல இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தங்கமணிக்கு நெருக்கமான ஒப்பந்தததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் பெரியசாமிக்கு சொந்தமான கொல்லிமலை வாலுக்குழிப்பட்டியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ், மங்களம் பகுதியில் உள்ள பண்ணை வீடு, மகன் அசோக்குமாருக்கு சொந்தான எருமப்பட்டியில் உள்ள டெக்ஸ்டைல் மில், அவரது வீடு, அலுவலகம், அசோக்குமாரின் மைத்துனர் தீபன் சக்ரவர்த்திக்கு சொந்தமான நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள வீடு, பரமத்திவேலூரில் உள்ள அசோக்குமாரின் மாமனார் சண்முகம் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுபோலவே நாமக்கல் அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகனுக்கு ,சொந்தழிப்பண்ணை மற்றும் வீடு, மோகனூர் ரோட்டில் பிவிஆர் தெருவில் உள்ள ஹேச்சரீஸ் நிறுவனம், பள்ளிபாளையத்தில் உள்ள ஆடிட்டர்செந்தில்குமார் வீடு, சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள ஹோடல் அதிபர் மணிகண்டன் வீடு, ஈரோட்டில் ஒண்டிக்காரன் பாளையத்தில் உள்ள செந்தில்நாதன் வீடு, வீரப்பன் சத்திரத்தில் உள்ள கோபாகிருஷ்ணன் வீடு, திண்டல் பாலசுந்தரம் வீடு உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனயின் முடிவில் வருமானத்திற்கு அதகமாக சேர்த்துள்ள சொத்துக்கள் தெரியவரும் என்று பேலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT