Published : 20 Mar 2016 02:24 PM
Last Updated : 20 Mar 2016 02:24 PM
நெய்யாறு இடது கரை கால்வாயில் இருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரை சில ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு நிறுத்தியது. இதனால் விளவங்கோடு வட்டத் துக்கு உட்பட்ட விவசாயி கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதேபோல் தேனீ ஆராய்ச்சி மையம் தேவை என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப் படவில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் இவ்விவகாரங்கள் விளவங்கோடு தொகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தண்ணீர் நிறுத்தம்
தமிழக - கேரள எல்லையோர விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 1963-ம் ஆண்டில் இரு மாநிலங்கள் சார்பிலும் கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து 2003 வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் தண்ணீர் பங்கிடப்பட்டு வந்தது. 2003-ல் காங்கிரஸ் தலைமை யிலான உம்மன் சாண்டி அரசு, கேரள நீர் ஆதாரங்களிலிருந்து, பிற மாநிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்க கூடாது என்று சட்டம் பிறப்பித்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது.
சாகுபடி பாதிப்பு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, ‘கடந்த 2003-ம் ஆண்டு, கேரளத்தில் இருந்த காங்கிரஸ் அரசு, ‘எந்தவொரு மாநிலத்துக்கோ, யூனியன் பிரதேசத்துக்கோ தண்ணீர் விநியோகிக்க கூடாது’ என, தன்னிச்சையாக ஒரு சட்டத்தை பிறப்பித்தது. அதிலிருந்து தான் பிரச்சினை தொடங்கியது.
இப்போது நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரத் தில் தமிழகத்தின் உரி மையை நிலைநாட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 40 ஆண்டு களாக வந்துகொண்டி ருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதால் விளவங்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது.
கால்வாய் சேதம்
தண்ணீர் இனிமேல் வரவே வராது என நினைத்து விட்டார்களோ என்னவோ, கால்வாயை தூர்வாராமலும், பல இடங்களில் உடைப்புகளை சரிசெய்யாமலும் அப்படியே விட்டு விட்டனர். இனிமேல் தண்ணீர் திறந்துவிட்டால் கூட பயன் தருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இதை வெறும் வாக்குக்காக பயன்படுத்தாமல் மக்களின் சோற்றுப் பிரச்சினை என்பதை உணர வேண்டும்’ என்றார் அவர்.
இதேபோல் தமிழகத்தில் தேன் அதிக அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் கன்னியாகுமரி முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள மார்த்தாண்டம் பகுதி, ‘தமிழகத்தின் தேன் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது. 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தேனீ வளர்ப்பு தொழில் அபரிமிதமாக நடைபெற்றாலும், நோய் தாக்கங்கள் ஏற்பட்டால் உரிய மருத்துவ தகவல்கள் பெறக்கூட ஆராய்ச்சி மையம் இல்லை. இதனால் விளவங் கோடு தொகுதிக்கு உட்பட்ட மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு கிடப்பில் கிடக்கிறது.
எதிர்பார்ப்பு அதிகம்
இதேபோல் தேனீக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கும் காலங்களில் தேனீ வளர்ப்போருக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். தேனுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் காதிவாரியம் போதிய முனைப்பு காட்ட வேண்டும் என, தேனீ வளர்ப்போரின் எதிர்பார்ப்பு களும், அதிகமாக உள்ளது. இவ்விரு பிரச்சினைகளும் தொகுதிக்குள் வலுவாக இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே இவ்விவகாரத்தை மையப்படுத்தி இங்கு பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT