Published : 20 Dec 2021 11:14 AM
Last Updated : 20 Dec 2021 11:14 AM

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோய்: மாடுகள், ஆடுகள் உயிரிழப்பு

கடலூர்

கடலூர் வட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று கடலூரில் நடந்தது.

சங்க அமைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பால் உற்பத்தியாளர்கள் ராஜா, ரகு, சிவா வீரராகவன், இளங்கோவன், வெங்கடேசன், ராஜவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடு கள் உயிரிழந்துள்ளன.

கோமாரி நோயைத் தடுக்க சிறப்பு முகாம்களை அமைத்து பாதுகாத்திட வேண்டும். தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கவேண்டும். உயிரிழந்த ஆடுகள், மாடுகளை கணக்கெடுப்பு நடத்திமாடுகளுக்கு ரூ. 50 ஆயிரம், கன்றுகளுக்காக ரூ.15 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ.7 ஆயிரம் நிவாரணம்தமிழக அரசு வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பாதிரிப்புலியூரில் இயங்கிவந்த கால்நடை மருத்துவம னையை மீண்டும் இயங்க உரியநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 22ம் தேதி கடலூர் புதுப்பாளையம் மாவட்ட கால்நடை துறை அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x