Published : 19 Dec 2021 11:41 AM
Last Updated : 19 Dec 2021 11:41 AM

தமிழ்நாடு பள்ளி பாடநூல்களை அச்சிடும் ஒப்பந்தம் தமிழக அச்சகங்களுக்கே வழங்கப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு பள்ளி பாடநூல்களை அச்சிடும் ஒப்பந்தம் தமிழக அச்சகங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில் 50 % அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், முதல் ஆர்டர் ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருந்தால் அரசின் செயல் தவறானது.

தமிழ்நாட்டில் உள்ள அச்சகங்கள் போதிய பணி இல்லாததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாழ வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதை செய்யாமல் அண்டை மாநிலங்களின் அச்சகங்களுக்கு பணி வழங்குவது நியாயமல்ல. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்குத் தேவையான பாடநூல்களை சொந்த மாநிலத்தில் தான் அச்சடிக்கின்றன; பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. அதேபோல் தமிழக அரசும் தமிழக அச்சகங்களின் நலனை மட்டும் காக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x