Published : 19 Dec 2021 08:59 AM
Last Updated : 19 Dec 2021 08:59 AM

கால் விரல் நுனிகளை மடக்கி நடந்து சேலம் சிறுவன் சாதனை: இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தார்

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறுவன்  ஜித்.

சேலம்

எல்கேஜி படிக்கும் சேலம் மாணவர் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி 250 அடி தூரம் நடந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி மருத்துவர் ரேவதி. இவர்களின் மகன் ஸ்ரீ ஜித் (4) தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இவர் காலில் உள்ள 10 விரல்களின் நுனிகளை மடக்கி நடக்க பயிற்சி பெற்று வந்தார்.

இவரின் தொடர் பயிற்சி காரணமாக 250 அடி தூரம் வரை நடக்கும் திறனை பெற்றார். கடந்த அக்டோபர் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜித், காலின் பத்து விரல் நுனியை மடக்கி 1.27 விநாடிகளில் 250 அடி தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.

இதையடுத்து, இவரது சாதனையை அவரது பெற்றோர், வீடியோவில் பதிவு செய்து, உரிய ஆவணங்களுடன் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸூக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ ஜித்தின் சாதனையை ஏற்ற இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் கடந்த வாரம் ஸ்ரீ ஜித்துக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியது. மேலும், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திலும்,  ஜித் புகைப்படம் மற்றும் அவர் பெற்ற விருதையும் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x