Published : 04 Mar 2016 10:58 AM
Last Updated : 04 Mar 2016 10:58 AM
மதுரையில் பல் பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக பல் மருத்துவர் ஒருவர் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் பற்களை சேகரித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண் டியைச் சேர்ந்தவர் பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜிப்ரீல் (33). இவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் பல் மருத்துவப் பிரிவு தலைமை நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் பல் பாதுகாப்பு விழிப்பு ணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத் துவதற்காக பல் ஈறுகளின் வீக்கம், ஈறுகளில் தொற்றுக்கிருமிகள் தாக் கம், ஈறுகளை முறையாக பராமரிக் காமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு இவரிடம் சிகிச் சைக்கு வந்த நோயாளிகளிடம் இருந்து எடுத்த 10,000 பற்களை சேகரித்து வைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதா வது: பல் மனிதனின் மிக முக்கிய மான உறுப்பு. பல் இல்லையென் றால் ஒருவரின் முக அமைப்பே மாறிவிடும். மனிதனுக்கு மொத்தம் 32 நிலைப் பற்கள் உள்ளன. இந்த பற்கள் சிறுவயதில் தோன்றி வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக் கும். ஒரு பல் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டம் கண்டு விழும் நிலைக்கு வருவதற்கு 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், நாம் முதலிலேயே பல் மருத்துவரை அணுகுவதில்லை.
30 வயதுக்கு மேல் பல்லில் வெண்படலம், கறை படிய ஆரம் பிக்கும். இதுவே பல் பிரச்சினையின் ஆரம்ப நிலை. இதற்கு அடுத்து ஈறுகளில் ரத்தம் வெளியேறும். பற்களில் மெல்லமெல்ல படியும் அழுக்கு பல் ஈறுகளில் கிருமிகளை உண்டாக்கும். ஈறுகளும் பல்லைத் தாங்கிப் பிடிக்கும் எலும்புகளும் வலுவிழக்கத் தொடங்கும். இதற் குள் வந்தால் பல்லைக் காப்பாற்றி விடுவோம்.
ஆனால், இது முற்றி தாங்க முடியாத வலி, வீக்கம், சாப்பிட முடியாமை, தண்ணீர் அருந்த முடியாமை, நாக்கை நீட்ட முடியாத நிலைமை, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்றவை ஏற்படும்போதுதான் பல் மருத்துவரிடம் வருகிறோம். அதனால், பற்களைக் காப்பாற்ற முடியவில்லை.
அப்படி நான் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை சேகரித்த பற்கள்தான் இந்த 10 ஆயிரம் பற்கள். சாதனைக்காக இதை நான் செய்யவில்லை. பற் களைப் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அந்த விழிப் புணர்வை ஏற்படுத்தவும், பேசவும் இந்த சாதனையை நிகழ்த்தி உள் ளேன்.
ஒரு கண் டாக்டரை கண்ணை எடுப்பவராக நினைப்பதில்லை. கண்ணை காப்பாற்றுபவராகத்தான் நினைக்கின்றனர். ஆனால், பல் டாக் டரை மட்டும் பல்லை எடுப்பவராக மக்கள் நினைக்கின்றனர். பல் லைக் காப்பாற்றுபவரே பல் டாக்டர். 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் இருசக்கர வாகனங்களைக்கூட 3 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்கிறோம். ஆனால், நாம் தினமும் பற்களை துலக்குவதோடு சரி. பல்லை பராமரிப்பதே இல்லை.
பல்லை துலக்கினால் மட்டும் போதாது. 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்ய வேண்டும். காலை யில் பல் துலக்கும் அந்த நிமிடம் கூட பல்லின் மீது நம்முடைய கவனம் இருப்பது இல்லை. பல்லை ஒழுங் காக துலக்காமல், பராமரிக்காமல் இருந்தால் பல் ஈறுகளில் வீக்கம், தொற்றுக் கிருமிகள், ரத்தக் கசிவு ஏற்பட்டு பல் ஈறு சிதைவு ஏற்படுகிறது.
இந்தியாவில் 75 சதவீதம் பேருக்கு பல் ஈறு சிதைவு ஏற்படுகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 90 சதவீதம் பேருக்கு பல் சொத்தை ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பற்கள் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.
சாப்பிடும் முறையால் முக அமைப்பு மாறும் அபாயம்
டாக்டர் ஜிப்ரீல் மேலும் கூறியதாவது: பற்களை தினமும் மென்மையான பிரஸ்ஸைக் கொண்டு துலக்க வேண்டும். இருமுறை அல்லது அதற்கும் மேற்பட்ட முறை பல் துலக்கலாம். இதில் தவறில்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஸ்ஸை மாற்ற வேண்டும்.
உணவு, சாக்லேட், ஐஸ்கிரீம், பிஸ்கெட், மிட்டாய் போன்றவற்றை சாப்பிடும்போது அவை பற்களின் இடைவெளிகள், பற்களின் குழிகளில் தங்குகின்றன. அதனால் சாப்பிட்டபிறகு வாயைக் கொப்பளிக்க வேண்டும். பற்களுக்கிடையே உணவு சிக்கிக்கொண்டால் குத்தி எடுக்கக்கூடாது. ஒருபுறமாக கடித்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் நாளடைவில் சாப்பிடாத மறுபுறம் தசைகள் சுருங்கி முக அமைப்பு மாறி வயதான தோற்றம் ஏற்படும் என்றார்.
பல்லை ஒழுங்காக துலக்காமல், பராமரிக்காமல் இருந்தால் பல் ஈறுகளில் வீக்கம், தொற்றுக் கிருமிகள், ரத்தக் கசிவு ஏற்பட்டு பல் ஈறு சிதைவு ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT