Published : 18 Dec 2021 05:11 PM
Last Updated : 18 Dec 2021 05:11 PM
கடலூர்: தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். நடராஜர் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் கரோனா தொற்று பரவுமா? என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று (டிச.18) சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர், தரிசன விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைத் தீய சக்திகள் அபகரிக்க பல்வேறு முறை முயற்சி செய்தனர்.கோயிலை எடுக்க முடியவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து கோயில்களை இடித்து வருகிறார்கள். தில்லை நடராஜர் கோயில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கிறார்கள்.
தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். நடராஜர் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் தொற்று பரவுமா? பாஜகவினர், இந்து மக்கள் போராடியாவது தேர்த் திருவிழாவை நடத்திக் காட்ட வேண்டும். தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் மன்னனுக்குக் கேடு எனச் சொல்லப்பட்டுள்ளது. தற்போது மன்னர் என்றால் முதல்வர். கள்ளச் சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் சென்ற காந்தி அமைச்சராக இருக்கிறார்.
பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு அடுத்த நிமிடமே புட்டுபுட்டு வைத்துவிட்டார். கோயில் நிலத்தைக் காப்பாற்றாமல் கொள்ளை அடிக்கும் துறைதான் அறநிலையத்துறை. இந்து விரோத ஸ்டாலின் அரசு ஒவ்வொரு நாளும் இந்து கோயில்களை எடுக்க வேண்டுமென மிரட்டுகிறது. இந்து மதத்திற்கு விரோதமாகச் செயல்படாதீர்கள். அதனைத் தோலுரித்துக் காட்டுவேன்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT