Published : 12 Mar 2016 09:16 AM
Last Updated : 12 Mar 2016 09:16 AM
சென்னை துறைமுகம் - எண்ணூர் காமராஜர் துறைமுகம் இடையே சிறிய ரக கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்படுகிறது. இதன் மூலம், சாலை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் கன்டெய்னர் சரக்குகளை கையா ளும் நாட்டின் மிகப் பெரிய துறை முகங்களில் ஒன்றாக திகழ்கிறது. நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களில் கையாளப்படும் கன்டெய்னர் சரக்கில் 24.80 சதவீத கன்டெய்னர் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டு வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் அனைத் தும் கன்டெய்னர் மூலம் துறை முகத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது. இதனால் துறைமுகத்துக்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக சென்னை துறைமுகம்-எண்ணூர் காமராஜர் துறைமுகம் இடையே சிறிய ரக சரக்குக் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கப் படுகிறது. இதுகுறித்து சென்னை துறைமுக தலைவர் (பொறுப்பு) சிரில் சி.ஜார்ஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு சென்னை துறைமுகம்-எண்ணூர் காமராஜர் துறைமுகம் இடையே சிறிய ரக சரக்குக் கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், சுங்கத் துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலை யில், சுங்கத் துறை அனுமதி உள்ளிட்ட எல்லாவிதமான அனுமதிகளும் பெறப்பட்டுள்ள தால் இச்சரக்குக் கப்பல் போக்கு வரத்து நாளை (இன்று) முதல் தொடங்கப்படுகிறது.
இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து பெரிய கப்பல்கள் மூலம் வரும் சரக்கு கன்டெய்னர்கள், சென்னை துறைமுகத்தை வந்த டைந்ததும் அவை அங்கிருந்து சிறிய கப்பலில் ஏற்றப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கி ருந்து சரக்குகளை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். அதே போல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளையும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கு பதிலாக எண்ணூர் காமராஜர் துறைமுகத் துக்கு கொண்டுவந்தால் போதும். அச்சரக்குகள் அங்கிருந்து சிறிய சரக்குக் கப்பல் மூலம் சென்னைத் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு பெரிய கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 கன் டெய்னர்கள் வரை சிறிய கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும். இதன் மூலம், சென்னை துறைமுகம்-எண்ணூர் இடையே சாலை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும்.
இவ்வாறு சிரில் ஜார்ஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT