Published : 16 Dec 2021 12:43 PM
Last Updated : 16 Dec 2021 12:43 PM
சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு இன்றியமையாப் பங்கினை ஆற்றி வருகின்றன. மிகப்பெரிய சமூகப் பொருளாதார இயக்கமான கூட்டுறவு இயக்கம், வறுமையை ஒழிக்கவும், சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அந்த வகையில், கூட்டுறவுத் துறையின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலைக் கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூகப் பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களைத் தமிழக முதல்வர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
11 | மதுரை | 2 | செக்கவூரணி, ஒத்தக்கடை |
12 | நாகப்பட்டினம் | 2 | சிக்கல், கத்திரிபுலம் |
12 | மயிலாடுதுறை | 2 | பூம்புகார், மின்னம்பந்தல் |
தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் சிறந்த பொலிவுடன் விளங்கிட, அவற்றில் கணினி மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT