Published : 16 Jun 2014 10:15 AM
Last Updated : 16 Jun 2014 10:15 AM
சென்னையில் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்துடன் கூடிய மீட்டர் பொருத்துவதும் கட்டாயமாக்கப்பட்டது. சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, போக்குவரத்து போலீஸார், போக்குவரத்து துறை யினர் சோதனை நடத்தி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக் களை பறிமுதல் செய்துவருகின்ற னர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.3,000 வரை அபராத தொகையும் வசூலிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்கும் வகையில் கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடந்தது. பல்வேறு ஆட்டோ தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன. ஏஐடியூசி சார்பில் சேஷசயனம், தமிழ்ச்செல்வன், எம்.சாமிநாதன், தொமுச சார்பில் அஞ்சல்ராமன், சிஐடியூ சார்பில் எஸ்.ராஜேந்திரன், மனோகரன், ஐஎன்டியூசி சார்பில் அழகேசன் உள்பட 8 ஆட்டோ தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர். கட்டணம் மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைப்பது, டிஜிட்டல் மீட்டர் பொருத்துவது, போலீஸாரின் கெடுபிடிகள் ஆகி யவை குறித்து விரிவாக பேசினர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறிய தாவது: ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். டிஜிட்டல் மீட்டரை விரைவில் வழங்க வேண்டும்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ஆட்டோக்களை உடனடி யாக விடுவிக்க வேண்டும். தொழிலா ளர்களிடம் வசூலித்த அபராத தொகையை திருப்பித் தரவேண்டும். ஆட்டோ தொழிற்சங்கத்தினரை அமைச்சர் வரும் புதன்கிழமைக்குள் அழைத்துப் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் 19-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
காலை 9 மணி அளவில் மன்றோ சிலையில் இருந்து கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். இதில் 50 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.
இவ்வாறு சேஷசயனம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT