Published : 26 Mar 2016 02:38 PM
Last Updated : 26 Mar 2016 02:38 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினர் முனைப்புடன் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் 2011 தேர்தலில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக, காங்கிரஸ் கூட்டணி, தற்போது 6 தொகுதிகளையும் கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளது. அதிமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் குமரி மாவட்ட திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்திருந்தார். கட்சி அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில் உள்ள குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது திமுக வெற்றிபெற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 தொகுதிகள் அடங்கிய திமுக கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக சுரேஷ்ராஜனும், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகள் அடங்கிய மேற்கு மாவட்டத்தின் செயலாளராக மனோதங்கராஜும் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைந்துள்ளதால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப் புடன் திமுகவினர் செயல்பட்டு வருகின் றனர். பூத் கமிட்டி கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சுவர் விளம்பரம் என திமுக முகாம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட சுரேஷ்ராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி ஆஸ்டின், சாய்ராம், சிவராஜ் ஆகியோரும் கன்னியாகுமரி தொகுதியைப் பெற முயற்சித்து வருகின்றனர்.
நாகர்கோவில் தொகுதிக்கு முன்னாள் எம்.பி.கள் ஹெலன் டேவிட்சன், ஆஸ்டின், நகரச் செயலாளர் மகேஷ், சிவராஜ் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தொகுதிக்குள் முன்பு நாடார் வாக்குகள் அதிகமாக இருந்தன. இப்போது தொகுதி மறுசீரமைப்பில் அனைத்து ஜாதியினரும் கலந்து இருப்பதாலும், நகரப் பகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் இத்தொகுதியில் சீட் பெற கடும் போட்டி நிலவி வருகிறது.
குளச்சல் தொகுதி மீனவப் பிரதிநிதி க்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகி றது. முன்னாள் எம்.எல்.ஏ பெர்னார்டு, சசியோன், பசலியான், ராஜேஷ்குமார், வளர் அகிலன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே சமயம், சிட்டிங் எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இத்தொகுதியை காங்கிரஸ் கேட்டுப் பெறும் வாய்ப்புள்ளது.
மேற்கு மாவட்ட திமுக
கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் காங்கிரஸ் வெற்றி பெற்றவை. கிள்ளியூர் தொகுதியை குறி வைத்து திமுகவும் வேலை செய்து வருகிறது.
அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மனோதங்கராஜ் சீட் பெற முனைப்பு காட்டி வருகிறார். பத்மநாபபுரத்தில் மனோதங்கராஜ், சிட்டிங் எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன், ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி ஜான் நிக்கல்சன் ஆகியோர் சீட் பெற முயற்சித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT