Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

சபரிமலை சீசனால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு; மீனாட்சியம்மன் கோயில் மொபைல் போன் பாதுகாப்பு அறையில் நெரிசல்: தடையை நீக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை

மீனாட்சியம்மன் கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர் களால் மொபைல் போனை ஒப் படைக்கும் பாதுகாப்பு அறை யில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக் தர்களின் சிரமத்தைத் தவிர்க்க கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்துச்செல்ல நீதிமன்றம் மூலம் உள்ளூர் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயி லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முன்பு அனுமதிக்கப்பட்டனர். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் மொபைல் போன்கள் கொண்டு செல்ல நீதிமன்றம் தடைவிதித்தது.

மொபைல் போன்களை பாது காப்பு அறையில் ஒப்படைத்த பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரு காரணங்களால் உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வருவது வெகுவாகக் குறைந்துள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவது அதிகரித்துள்ளது. இவர்கள் வழக்கமான பரிசோதனைக்கு முன் தங்கள் மொபைல் போன் களையும், காலணிகளையும் அதற் கான பாதுகாப்பு அறைகளில் ஒப் படைத்துவிட்டுச் செல்ல வேண்டி உள்ளது.

இதனால் பாதுகாப்பு அறைகள் முன் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கின்றனர். இதன் பிறகு பரிசோதனைக்கு ஒரு வரிசை என்று பெரும் அலைக் கழிப்புக்குப் பிறகே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல வேண்டி இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயி லில் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடையை நீக்க அரசு மேல்முறையீடு செய்யும் என 2 மாதங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதற்கான முயற்சிகளை அரசு இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

கெடுபிடி தொடர்ந்தால் பக்தர்கள் கோயிலுக்கு வரத் தயங்குவார்கள். அதனால் மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடையை நீக்க நீதிமன்றம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x