Last Updated : 14 Dec, 2021 07:37 PM

1  

Published : 14 Dec 2021 07:37 PM
Last Updated : 14 Dec 2021 07:37 PM

பேருந்து ஓட்டுநரான தந்தையின் பணிக்குப் பெருமை சேர்த்த மகன்: மணமகளுடன் அரசுப் பேருந்தில் பயணம்; வைரலான திருமண வீடியோ

தந்தையின் பணிக்கு பெருமை சேர்க்கும்விதமாக மணமாலையுடன் அரசு பேருந்தில் மணமக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்ததால், சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ காட்சி.

நாகர்கோவில்

மார்த்தாண்டத்தில் மணமாலையுடன் அரசுப் பேருந்தில் மணமக்கள் பயணம் செய்தனர். பேருந்து ஓட்டுனர் மகனின் இந்த மணமக்கள் பயண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மாமூட்டுகடையைச் சேர்ந்தவர் சிவராம். தக்கலையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், மார்த்தாண்டத்தை சேர்ந்த ஆசிரியை அபிராமிக்கும் இன்று மார்த்தாண்டத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் வழக்கமான நடைமுறைபோல் மணமக்கள் காரில் மாமூட்டுகடையில் உள்ள மணமகன் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மணமகன் சிவராமின் நண்பர்கள் வேறு காரில் பின்தொடர்ந்தனைர். மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது மணமக்களின் கார் நின்றது. அப்போது அடுத்த காரில் வந்த நண்பர்கள் மணமக்கள் இருவரையும் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அவர்களும் வேகமாக நடந்து அங்கு நின்ற மாமூட்டுகடை செல்லும் அரசு பேருந்தில் ஏறினர். அப்போது மணமாலையுடன் இருக்கையில் வந்து அமர்ந்த சிவராமையும், அபிராமியையும் சக பயணிகள் ஆச்சரியத்துடன் பாத்ததுடன் வாழ்த்துக்களை தெரிவித்துடன்.

அத்துடன் வழக்கமான ஆரவாரத்துடன் பேருந்தில் பயணம் செய்த மணமக்களை நண்பர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மணமகன் சிவராமின் தந்தை அரசு பேருந்தில் நடத்துனராக வேலைபார்த்து பணிஓய்வு பெற்றவர். இதனை நினைவுகூரும் வகையிலும், தனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட தந்தையின் பணிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திருமணம் செய்த நாளில் மனைவியுடன் அரசுப் பேருந்தில் தனது ஊருக்கு பயணம் செய்ததாக மணமகன் சிவராம் தெரிவித்தார். மணமக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x