Published : 17 Jun 2014 02:32 PM
Last Updated : 17 Jun 2014 02:32 PM

விகிதாச்சார முறையில் தேர்தல் நடைமுறை தேவையற்றது: கருணாநிதி மீது காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

விகிதாச்சார முறையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விகிதாச்சார முறையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார் தன்னுடைய வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சில புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த வகையிலம் பங்கம் வநதுவிடக்கூடாது என்ற அடிப்படையில்; நிறைவேற்றப்பட்டதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

அதன் அடிப்படையில்தான் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய ஆட்சியின்கீழ் உள்ள பகுதிகளிலும் எங்கள் இடங்கள் என்று வரையறுக்கப்பட்ட நியதிக்குள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்த நாட்டின் அனைத்து பகுதியினர்; மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேணடும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் வரும்போது ஒவ்வொரு தொகுதியிலும் பிரதிநிதி கிடைப்பாரா என்கிற உத்தரவாதம் இல்லை. பல பகுதிகளுக்கு பிரதிநிதி இல்லை என்று சொன்னால், மக்கள் யாரை அழைத்து பிரச்சனைகளை கூறுவார்கள்? எப்படி தீர்வு கிடைக்கும்.

ஒரு லட்சம் வாக்காளார்களுக்கும் குறைவாக உள்ள தொகுதிகள் உள்ளன. பல தொகுதிகளில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உருவாகும்.

விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் என்ற நிலை ஏற்பட்டால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படும்.

இப்போது நடைபெற்ற தேர்தல் அடிப்படையில் பார்த்தால் பா.ஜ.க.விற்கு 180 இடங்கள் தான் கிடைக்கும். மாநிலங்களிலும் இதே நிலை தான் ஏற்படும். ஆக எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி; கிடைப்பது என்பது கடினம். பல கட்சிகளை சேர்த்து தான் ஆட்சி அமைகக் வேண்டி வரும்.

விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் என்ற நிலை ஏற்பட்டால் எந்த தொகுதிக்கு யார் உறுப்பினர் என்று தெரியாத நிலை ஏற்படும். ஆக உறுப்பினர்களுக்கு பொறுப்பு என்பது குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எங்கள் தொகுதிக்கு உறுப்பினரே இல்லை என்றால், கோட்டாவே இல்லை என்கிற நிலை ஏற்படும்" இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x