Published : 30 Mar 2016 01:19 PM
Last Updated : 30 Mar 2016 01:19 PM

திருப்தியான கூட்டத்தால் தேமுதிக - மந கூட்டணி குஷி: களப்பணியை துரிதப்படுத்தி வெற்றி பெற வியூகம்

நாகர்கோவிலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், இக்கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற 5-ம் கட்ட தேர்தல் பிரச் சாரக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்றது.

கூட்டணி கட்சியினரே எதிர் பார்க்காத வகையில், இக்கூட் டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் இருக்கைகள் காலியாகி விட , ஏராளமானோர் நின்று கொண்டு கூட்டத்தை கவனித்தனர். இதைப் பார்த்து உற்சாகமானதால் மேடை யில் பேசிக் கொண்டிருக்கும் போதே வைகோ, `இங்கே இருக்கை களில் நிரம்ப இருப்பவர் கள் எங்கள் கட்சிகளில் ஈடுபாடு கொண்டவர்கள். ஆனால் இங்கே, எங்கள் மீது நம்பிக்கை வைத்து வந்திருப்பவர்கள் தான் இங்கே கூடி நிற்பவர்கள். இவர்கள் நடுநிலையாளர்கள். இவர்கள்தான் எஜமானர்கள். இவர்களைத் தான் நாங்கள் நம்புகிறோம்’ என்று பேசினார்.

அதே போல் ஏராளமான இளை ஞர்களும் கூட்டத்துக்கு வந்திருந் தனர். அவர்கள் மேடையின் அருகில் நின்று கொண்டே இருக்க, மாவட்ட நிர்வாகிகள் அவர்களை ஒரு இடத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அவர்கள் மேடையின் அருகே விட்டு நகரவில்லை.

கடைசியில் வைகோவே மைக் பிடித்து அவர்களை நகரச் சொன்னார். திரைப்பட நடிகர்கள் யாரும் இல்லாத ஒரு மேடைக்கு கூடிய கூட்டமும், கிடைத்த வரவேற்பும், கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

6 தொகுதிகள், 3 கட்சிகள்

தேமிதிக மக்கள் நலக் கூட்ட ணியை பொறுத்தவரை கிள் ளியூர், விளவங்கோடு தொகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், குளச்சல், நாகர் கோவில் தொகுதிகளில் மதிமுகவும், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் தேமுதிகவும் களம் இறங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தலித் வாக்குகள் உள்ளன. இதனை குறிவைத்து இத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறங்கும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமைத் தவுடன், கன்னியாகுமரி தொகுதி யில் தேமுதிக போட்டியிட விரும்புகிறது.

காரணம் கன்னியாகுமரி தொகு தியில் வெற்றி பெறும் கட்சியே மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என சென்டிமென்ட் நிலவுவதால், இத்தொகுதியில் போட்டியிட தேமுதிக உத்தேசித்துள்ளது.

தொழிலாளர் தொகுதி

தோட்டம், முந்திரி தொழிலாளர் கள், தனியார் காடுகள் பாது காப்பு சட்ட விவகாரத்துக்கு களம் கண்டது உள்ளிட்ட விவகாரங்களினால் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிக்குள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. அதையே மையமாக வைத்து அவ்விரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் போட்டியிட உத்தேசித்துள்ளது. நாகர்கோவில், குளச்சல் தொகுதிக் குள் மதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அவ்விரு தொகுதி களையும் மதிமுக விரும்புகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ள பாஜகவை வீழ்த்தும் அஸ்திரத்தை, அதனோடு கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக கையில் எடுத்துள்ளது. பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த சந்திரகுமார் எம்எல்ஏ, தன் பேச்சில் பாஜகவை ஒரு பிடி பிடித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குமரி மாவட்டத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு, குமரிக்கு அவர் செய்த பணிகள் என நீண்ட பட்டியலை வாசித்தார். மாநிலத் தலைவர்களின் பிரச்சாரம் மாவட்டத்தில் கட்சியை நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் தீவிர களப்பணியில் ஈடுபட் டுள்ளனர் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியினர். இருந்தும் இவர்களது கனவு பலிக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x