Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM
மாணவர்களின் படிக்கட்டுப் பயண விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவால் ஓட்டுநர் கள், நடத்துநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது, பேருந் துக்குள் இடமிருந்தும் படிக்கட்டு, ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது, பின் பகு தியிலுள்ள ஏணியில் ஏறி நின்று கொண்டு செல்வது, மேற்கூரை யில் நின்று பயணம் செய்வது போன்ற சம்பவங்கள் பல இடங் களில் நடக்கின்றன. இதைக் கண்டிக்கும் ஓட்டுநர், நடத்து நர்களிடம் மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை அருகே மின்சார ரயி லில் மாணவனும், மாணவியும் ஓடி வந்து ஏறும் காட்சி சமூக வலை தளங்களில் பரவியது.இந்தச் சம்பவத்தையடுத்து மாண வர்கள் பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத் தரவு ஓட்டுநர், நடத்துநர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் இடமிருந்தும் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும் மாணவர் கள் பேருந்துக்குள் வருவ தில்லை. அப்படியிருக்கும்போது எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது எப்படி நியாயமாகும் என அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளன மாநில இணைப் பொதுச் செயலர் எஸ்.சம்பத் கூறியதாவது: படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேச்சைக் கேட்பதில்லை.
பள்ளி முடிவடையும் நேரத்தில் பேருந்து நிறுத்தங்களில் இரு ஆசிரியர்களை நிறுத்தி பேருந்துகளில் மாணவர்கள் ஏறுவதை ஒழுங்குபடுத்த வேண் டும்.
போலீஸ் சோதனை மையத் தைப் பேருந்துகள் கடக்கும் போது படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை போலீஸார் எச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் படிப்படியாக மாண வர்களின் படிக்கட்டுப் பயணம் குறையும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT