Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM
மதுரை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ் (43). இவர் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்து களை பதிவதுண்டு. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என இவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், குன்னூரில் நடந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் இறந்த சம்பவத்தில் தீவிரவாத சதி இருக்கலாம் என சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளி யிட்டார். இதுகுறித்து மதுரை மாநகர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், சைபர்கிரைம் காவல்துறையில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து புதூர் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து மாரிதாஸை கைது செய்தனர். பின்னர் அவர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே மாரிதாஸை கைது செய்ய அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, மாநகர பாஜக தலை வர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட அக்கட்சியினர் திரண்டு போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதைடுத்து டாக்டர் சரவணன் உள்ளிட்ட 50 பேர் மீதும் புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். யூ-டியூபர் மாரிதாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே தனக்கு ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் அவரது தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT