Published : 13 Mar 2016 11:16 AM
Last Updated : 13 Mar 2016 11:16 AM

போக்குவரத்து துறையில் இரண்டரை ஆண்டுகளில் ஓய்வு பெற்ற 8,000 ஊழியர்களுக்கு ரூ.600 கோடி ஓய்வூதியப் பலன்கள் நிலுவை: 800 பேர் இறந்துபோன பரிதாபம்

தமிழக போக்குவரத்து துறை யில் கடந்த இரண்டரை ஆண்டு களில் 8 ஆயிரம் ஊழியர் கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் ரூ.600 கோடி நிலுவையில் உள் ளது. ஓய்வூதியப் பலன்களைப் பெறாமலேயே சுமார் 800 பேர் இறந்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப் புரம், கும்பகோணம், சேலம் உட்பட மொத்தம் 8 போக்கு வரத்து கழகங்கள் மூலம் தினமும் 22,500 பஸ்கள் இயக்கப்படுகின் றன. ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப அலுவலர்கள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். தின மும் 2.5 கோடி பேர் அரசு பஸ் களில் பயணம் செய்கின்றனர்.

போக்குவரத்து கழகங்களின் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 5 ஆயிரம் பேர் ஓய்வு பெறு கின்றனர். கடந்த 2013 அக்டோ பர் மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்ற 8 ஆயிரம் பேருக்கு பணிக்கொடை, தொகுப்பு தொகை, விடுப்பு ஒப்படைப்பு தொகை என ரூ.600 கோடிக்கு நிலுவையில் உள்ளது. இதனால், ஓய்வு பெற்ற தொழிலாளர் கள், அவரது குடும்பத்தினர் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 61 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 14 மாதங்களாக அகவிலைப்படி (டி.ஏ) நிலுவையில் உள்ளது. 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற் றப்படவில்லை.

இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: அரசு பஸ் ஒரு கி.மீ. இயக்க ரூ.32 செலவாகி றது. ஆனால், ரூ.28 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இயக் கப்படும் 23 ஆயிரம் பஸ்களில் 10 ஆயிரம் பஸ்கள் நஷ்ட மான வழித்தடத்தில் இயக்கப் படுகின்றன. இதுதவிர, பல்வேறு இலவச பஸ் பாஸ்கள் வழங்கப் படுகின்றன. இதனால், ஆண்டு தோறும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,000 கோடி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை அரசு வழங்கு வதில்லை.

ஆனால், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தொழி லாளர்களின் பணத்தை போக்கு வரத்து கழகங்களுக்கு செல விட்டு வருகிறது. இதுவரை தொழிலாளர்களின் பணம் சுமார் ரூ.4,500 கோடியை செல விட்டுள்ளது. இதனால்தான், ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளுக்கு பணிக்கொடை, தொகுப்பு தொகை, விடுப்பு தொகை உள்ளிட்டவை உடனுக்குடன் வழங்கப்படாமல் இருக்கின்றன. 2013 அக்டோபருக்கு பிறகு 8 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றள்ளனர். இதில், ஓய்வூதியப் பயன்கள் கிடைக் காமல் சுமார் 800 பேர் இறந்தே போய்விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி அரசு போக்கு வரத்து கழக உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘போக்கு வரத்து கழகங்கள் லாப நோக் கத்துடன் அல்லாமல், சேவை நோக்குடன் நடத்தப்படுகிறது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.800 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு அவ்வப்போது நிதி ஒதுக்கு கிறது. இழப்பை சரிசெய்ய மேலும் நிதி கோரியுள்ளோம். நிதி வரும்போது, தொழிலாளர் களுக்கான நிலுவை தொகை வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x