மானாமதுரை எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் திமுகவினர் வைத்த வரவேற்பு பேனரில் எம்எல்ஏ புகைப்படம் இடம்பெறவில்லை.
மானாமதுரை எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் திமுகவினர் வைத்த வரவேற்பு பேனரில் எம்எல்ஏ புகைப்படம் இடம்பெறவில்லை.

திமுகவில் கோஷ்டி பூசல்?- எம்எல்ஏ புகைப்படம் இல்லாமல் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்

Published on

சட்டப்பரேவைத் தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் மானாமதுரை எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.

பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் திறந்து வைத்தார். தமிழரசி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன் உள்லிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு வந்த அமைச்சரை வரவேற்று திமுகவினர் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் தமிழரசி எம்எல்ஏ புகைப்படம் இடம்பெறவில்லை. எம்எல்ஏ ஆதரவாளர்களும், அமைச்சர் ஆதரவாளர்களும் ஏற்கெனவே இருதரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எம்எல்ஏ புகைப்படமின்றி பேனர் வைத்ததன் மூலம் திமுகவில் கோஷ்டிபூசல் வெளிச்சத் துக்கு வந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in