Published : 04 Dec 2021 10:07 AM
Last Updated : 04 Dec 2021 10:07 AM

‘ஜோவத்’ புயல் எச்சரிக்கை; ரயில் சேவை மாற்றம்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

கோப்புப் படம்

சென்னை

‘ஜோவத்’ புயல் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'ஜோவத்' சூறாவளி காரணமாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்களைக் கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சில ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதுடன், பயணப் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவைகள் ரத்து விவரங்கள் பின்வருமாறு:

1. ரயில் எண் 12840 (04.12.21) டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் மெயில்
2. ரயில் எண் 13351 (04.12.21) தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
3. ரயில் எண் 12375 (04.12.21) தாம்பரம் - ஜசிதி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
4. ரயில் எண் 12839 (04.12.21) ஹவுரா - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மெயில்
5. ரயில் எண் 22606 (04.12.21) அன்று விழுப்புரம் ஜே.என் - புருலியா இரு வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
6. ரயில் எண் 12842 (05.12.21) டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
7. ரயில் எண் 22859(05.12.21) பூரி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

குறிப்பிட்ட ரயில் சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரயில் எண் 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 04 டிசம்பர் 2021 இன்று ஆலப்புழாவில் இருந்து மாலை 6.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கூடூர், பல்ஹர்ஷா மற்றும் ஜார்சுகுடா என மாற்று வழியில் இயக்கப்படும் என கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளதாகத் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x