Published : 02 Dec 2021 02:28 PM
Last Updated : 02 Dec 2021 02:28 PM
தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக எம்.பி. திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் எம்.பி. திரு நாவுகரசர் இன்று பேசியதாவது, “
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, வடகிழக்கு பருவமழை மிகக் கடுமையாக பெய்ததால், தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துப்போய் இருக்கிறது. தமிழகம், இதுவரை வழக்கமான மழைப் பொழிவைவிட, 55 சதவீதத்திற்கும் அதிகமான மழையைப் பெற்றுள்ளது. இதனால் டெல்டா பகுதி, வடக்கு மற்றும் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையால் 50 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; அதற்கு சம எண்ணிக்கையிலானோர் காயமும் அடைந்துள்ளனர். 9500 குடிசைகள் மற்றும் 2100 வீடுகள் சேதமடைந்துள்ளன. தவிர, 25 மாவட்டங்களில் கால்நடைகள் பெருமளவில் இறப்பு மற்றும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அவற்றில், 12 மாவட்டங்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விவசாய பயிர் இழப்பு 50,000 ஹெக்டேருக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 525 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விளைந்த பயிர்கள் அழிந்து, விவசாயிகளுக்கு கடும் நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு 550 கோடி ரூபாயை உடனடி நிவாரணமாகவும், மறுசீரமைப்பு மற்றும் நிரந்தர நிவாரணமாக .2079 கோடி ரூபாயையும் வழங்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. எனவே, தமிழக அரசு கடும் மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்தபடி தேவைப்படும் நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT