Last Updated : 02 Mar, 2016 08:36 AM

 

Published : 02 Mar 2016 08:36 AM
Last Updated : 02 Mar 2016 08:36 AM

கூட்டணி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி: விஜயகாந்த் மவுனம்.. பதற்றத்தில் தேமுதிக நிர்வாகிகள்

திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பெரும்பான்மை யான தேமுதிக நிர்வாகிகள் விரும் பும் நிலையில், விஜயகாந்தின் மவுனம் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இப்போது எல் லோருடைய பார்வையும் தேமு திக பக்கம்தான். அதன் கூட் டணி முடிவுக்காக பெரிய கட்சிகள் முதல் சின்னஞ்சிறு கட்சிகள்வரை காத்திருக்கும் நிலை. தேமுதிக தங்கள் கூட்டணியில்தான் இணை யும் என்று ஒரு பக்கம் பாஜகவும் மற்றொரு பக்கம் மக்கள் நலக் கூட்டணியும் கூறி வருகின்றன. இதுதவிர, திமுகவும் அழைப்பு விடுத்துவிட்டு வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இந்த 3 தரப்புடனும் பேச்சு வார்த்தை நடத்தினாலும், கூட்டணி பற்றி எந்தவொரு முடிவையும் விஜயகாந்த் இதுவரை எடுக்க வில்லை. தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். இதுபற்றி ஆலோ சனைக் கூட்டத்திலும் நேர் காணலின்போதும் கட்சித் தலை மையிடம் எடுத்துச் சொல்லியுள் ளனர். ஆனால், விஜயகாந்தின் மவுனம் பிறக்கட்சிகளை மட்டு மன்றி, அவரது சொந்தக் கட்சி நிர்வாகிகளையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என் பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. பாஜகவுடனோ, ம.ந.கூட்டணியுடனோ இணைந்து தேர்தலை சந்தித்தால், தேமுதிக வெற்றி பெற முடியாத நிலை உருவாகும். தனித்துப் போட்டி யிடுவதும் வாக்குகளை பிரிக்கவே உதவும். இவை அதிமுக வுக்குதான் சாதகமாக அமையும். எனவே, தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுக கூட்டணியில் இணை வதே சிறந்தது என்ற மனநிலையில் உள்ளனர். கடந்த 2 மாதங்களில், இதை கட்சித் தலைமையிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துக் கூறி வருகின்றனர்.

கடந்த முறை, அதிமுக வுடன் கூட்டணி அமைத்து எதிர்க் கட்சியாக தேமுதிக உயர்ந்திருந் தாலும், அக்கட்சியுடனான கூட் டணி முறிவுக்கு பிறகு தேமு திகவினர் பொருளாதார ரீதியாக வும், சட்ட ரீதியாகவும் நிறைய இன்னல்களை சந்தித்தனர். எனவே, திமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே மீண்டும் தேமுதிக நிர்வாகிகளும், தொண் டர்களும் எழுச்சியடைய முடியும். ஆனால், தலைமை இந்த விஷயத்தில் மவுனம் காப்பது நிர்வாகிகளை பதற்றத்தில் ஆழ்த்தி யுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக தயங்குவது ஏன்?

திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தயங்குவதற்கான கார ணம் குறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘அதி முக கூட்டணியில் குறைந்த இடங் களை பெற்றுக்கொண்டு போட்டி யிட்டதால்தான் கடந்த 5 ஆண்டு களில், தேமுதிகவால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஆகவே, தேர்தலுக்குப் பிறகும் தேமுதிகவின் உதவி திமுகவுக்கு தேவைப்படுகிற மாதிரியான சூழலை உருவாக்கும் வண்ணம், தொகுதிப் பங்கீடு அமைய வேண் டும் என தேமுதிக தலைமை விரும்புகிறது’’ என்றார்.

அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு தேமுதிகவினர் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நிறைய இன்னல்களை சந்தித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x