Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM
கட்டுமானப் பணிக்காக திருச்சி யில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை மாநகராட்சி நிர்வாகம் கொட்டகை அமைத்து மறைத்துள்ளதாகவும், கவனிப் பின்றி குப்பை மேடாக காட்சி யளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி தென்னூர் உய்யக் கொண்டான் வாய்க்கால் கரை யில் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலி மலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்கள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு மொழிப்போர் தியாகிகள் நாளில் இங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி, சிலை வைப்பதாக கூறிய அதிமுக அரசு இதுவரை அதை செய்யவில்லை’’ என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடினார். அதேபோல திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி இங்கு மரியாதை செலுத்த வந்திருந்தபோது ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் இங்கு நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும்’’ என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டும் பணிக்காக, சண்முகம் நினைவிடத்துக்கு செல்லும் வழியை அடைத்து தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சின்னச்சாமி நினைவிடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
ஆட்சி மாறியும்...
இதுகுறித்து தமிழ்தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் நா.ராசாரகுநாதன் கூறும்போது, ‘‘அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களைக் கண்டுகொள்ளாதது வேதனைய ளிக்கிறது. ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. கொட் டகை அமைத்தும், குப்பை மேடாக் கியும் மொழிப்போர் தியாகிகளை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
திருச்சி மாவட்ட தமிழ் அமைப் புகள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் வீ.நா.சோமசுந்தரம் கூறும்போது, ‘‘இங்குள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூய்மையாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவிடங்களில் மணிமண்டபம் கட்டி, அருகில் காட்சியரங்கம் அமைத்து அதில் தியாகிகளின் புகைப்படங்கள், தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். திருச்சியின் முக்கிய அடையாளத் தலங்களில், ஒன்றாக இந்த நினைவிடங்களை மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT