Published : 09 Jun 2014 10:24 AM
Last Updated : 09 Jun 2014 10:24 AM

பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் தொலை தூரக்கல்வியில் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி அனுபவம் உடைய பட்டதாரிகள் சேரலாம். தற்போது தொடர்ந்து பணியில் இருந்து வர வேண்டும். தமிழ்வழிக்கு 500 இடங்களும், ஆங்கிலவழிக்கு 500 இடங்களும் உள்ளன.

2014-2015-ம் கல்விஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் ஆகஸ்ட்14-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. பல்கலைக்கழக மண்டல அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்களில் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். இந்த விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.tnou.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் திக்கொள்ளலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது விண் ணப்பக் கட்டணமாக ரூ.500-க்கு ‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை-15’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை இணைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.550-க்கு டிமாண்ட் டிராப்டை பல்கலைக் கழகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்துக்கு ஆகஸ்ட் 14-ம்தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத்தேர்வு இல்லை

சேர்க்கை பணி அக்டோபர் மாதம் தொடங்கும். நுழைவுத் தேர்வும் ஏதும் கிடையாது. வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24306657, 24306658 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x