Published : 28 Nov 2021 01:13 PM
Last Updated : 28 Nov 2021 01:13 PM

அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்: தாம்பரம் மாநகராட்சி அறிமுகம்

தாம்பரம்

தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வசதியாக இலவச தொலைபேசி, இ மெயில் மற்றும் வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு, சாக்கடை பராமரிப்பு, குடிநீர் வசதி மற்றும் பொது சுகாதாரம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை மாநகராட்சி புகார் மையத்திற்கு 1800 425 4355, tambaramcorpgrievance@gmail.com, வாட்ஸ்அப் நம்பர் 8438353355 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த எண் மூலம் வரப்பட்ட புகார்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். அதன் பின்னர், புகார் பட்டியலிலிருந்து புகார் விவரம் நீக்கப்படும்.

அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் படி மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்

தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் இணைக்க பட்டுள்ளதால் தாம்பரத்துடன் இணைந்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே பொதுவான புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x