Last Updated : 25 Mar, 2016 02:41 PM

 

Published : 25 Mar 2016 02:41 PM
Last Updated : 25 Mar 2016 02:41 PM

ஒப்பந்ததாரர்களின் முன் அனுமதியின்றி அரசு பஸ்களில் தேர்தல் ஆணையம் விளம்பரம்? - நஷ்டம் ஏற்படுவதாக விளம்பர நிறுவனங்கள் புகார்

அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்காக ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களிடம் அனுமதி பெறாமல், வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் ஒட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள விளம்பர நிறுவனங்கள் சிக்கலைச் சந்தித்துள்ளன.

நூறு சதவீத வாக்குப்பதிவை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக மக்களை எளிதில் சென்றடையும் நூதன விழிப்புணர்வு விளம்பர ங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிக முக்கியத்துவம் கொடு த்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து க்கழக பேருந்து களில் ‘மே 16-ம் தேதி அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்’ என்ற விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகின்றன.

இதனால் விழிப்புணர்வு ஏற்படுவது ஒருபுறமிருக்க, அரசுப் பேருந்துகளில் விள ம்பரம் செய்ய ஒப்பந்தம் எடுத் துள்ளவர்களிடம் அனுமதி பெறாமல் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்ட மடைந்து வருவதாக விளம்பர நிறுவனத்தினர் கவலை தெரிவி க்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த தனி யார் விளம்பர நிறுவனத்தினர் கூறியதாவது: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 2000 அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய 3 வருட ஒப்பந்தம் செய்துள்ளோம். இதற்காக ரூ.1 கோடி முன்பணமாகவும், மாதம் தோறும் ரூ.25 லட்சமும் செலுத்தி வருகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுவோர், எங்கள் மூலம் பேருந்துகளில் விளம்பரப்படுத்தி வரு கின்றனர்.

பேருந்துகளின் பின்புறம் இந்த விளம்பரங்கள் காட்சிப்படு த்தப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எங்களிடம் எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாக, சில பேருந்துகளில் தேர்தல் விளம் பரங்களை ஒட்டி வருகின்றனர்.

இதனால் எங்களது வாடிக் கையாளர்களின் விளம்பரங்களை ஒட்ட முடி யவில்லை. பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

தேர்தல் விழிப்புணர்வு விளம் பரங்கள் ஸ்டிக்கர் வடிவில் இருப்பதால், அதை சீரமைத்த பிறகே நாங்கள் விளம்பரங்களை வைக்க முடியும். அதற்கும் தனியே செலவாகும். எனவே இதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மதுரையிலும்…

இதேபோல மதுரையில், அங்குள்ள ஒரு நிறுவனம் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் மேற் கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பே அங்கும் முன் அனுமதி பெறாமல், பேருந்துகளில் தேர்தல் விழி ப்புணர்வு விளம்பரங்கள் ஒட்ட ப்பட்டு விட்டதாகக் கூறப்படுகி றது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, ‘அனைத்து பே ருந்துகளிலும் இந்த விளம் பரங்கள் ஒட்டப்படவில்லை. வாக்குகள் குறைவாக பதிவா கும் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே ஒ ட்டப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக்கழக அதி காரிகள் யாரும் இந்த பிரச்சி னையை எனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை. உட னடி யாக விசாரித்து நடவடிக்கை எடு க்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x