Published : 26 Nov 2021 03:34 PM
Last Updated : 26 Nov 2021 03:34 PM

சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அலுவலகம்

கோப்புப் படம்

சென்னை

சுயதொழில் தொடங்க விருப்பம் முள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

"சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 லட்சம் ஆகும் இருக்க வேண்டும்.

1.தொழில் முனைவோர் திட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல்.

2.இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

3. சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50 சதவிகித பெறுவது.

பட்டியல் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் கீழ்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

1.குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று

2. சாதி சான்றிதழ்

3.வருமானச் சான்றிதழ் ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்.

4. ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை

5.விலைப்புள்ளி GSTIN எண்

6. திட்ட அறிக்கை

7.ஓட்டுநர் உரிமம் வாகனக் கடனுக்கு மட்டும்

8.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

9.கல்வித் தகுதி சான்றிதழ்

10.விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். (முன் அனுபவச் சான்றிதழ்)

11. வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல். இவைகள் அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும்."

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x