Published : 24 Nov 2021 01:24 PM
Last Updated : 24 Nov 2021 01:24 PM
சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி கலந்துக்கொண்ட தமிழக வீரர், வீராங்கனைகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"முதல்வர் ஸ்டாலின் இன்று (24.11.2021) தலைமைச் செயலகத்தில், உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில்பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி-2021 இம்மாதம் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம் பெற்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் ருத்திக், தினகரன், சிவராஜன், கரண், அமுதா, சந்தியா, பிரேம் குமார், சீனிவாசன் நீரஜ், போட்டிகளில் பங்கேற்ற வீரர் தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி்வ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்."
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT