Published : 05 Mar 2016 09:08 AM
Last Updated : 05 Mar 2016 09:08 AM
அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பொது மக்களின் நலன் கருதி வெளியிட வேண்டாம் என பத்திரிகைகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண் டுள்ளது. இதுதொடர்பாக முக்கிய நாளிதழ்களுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அண்மைக்காலமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள அதிகபட்ச 12.5 சதவீத வட்டியை விட அதிகளவு வட்டி தரு வதாகக் கூறி பொதுமக்களிட மிருந்து பணத்தை வசூலிக்கின்றன. ஆனால் கூறியபடி வட்டி வழங்கு வதில்லை. அதேபோல், ‘எம்.எல்.எம்.’ எனப்படும் பல்முனை சந்தை நடத்தும் நிறுவனங்கள் பொன்ஸி திட்டங்களை செயல்படுத்துகின்றன. பொன்ஸி என்பது ஒரு மோசடி திட்டமாகும். இதில் அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்று சொல்வதை நம்ப முடியாது.
ஆரம்பத்தில் முதலீடு செய் வோருக்கு வழங்கப்படும் பணம் திட்டத்தின் பயன்பாட்டில் கிடைக் கும் வருவாயிலிருந்து தரப்படுவ தில்லை. மாறாக முதலீடு செய்யப் படும் பணத்திலிருந்து தரப்படு கிறது. இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் வீழ்ச்சியடைந்து முதலீடு செய்தவர்கள் தாங் கள் பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடுகிறது.
இத்தகைய வங்கி சாரா நிறு வனங்கள் அதிகளவு வட்டித் தருவதாக பொய்யான வாக்குறுதி களை கவர்ச்சிகரமான விளம்பரங் கள் மூலம் வெளியிடுகின்றன. இந்த விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தைக் கட்டி ஏமாறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி அனைத்து நாளிதழ்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, பொய்யான வாக் குறுதிகளை அளிக்கும் நிதி நிறு வனங்கள் விளம்பரம் அளித்தால் முதலில் அந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றுள்ளதா என்பதை https://www.rbi.org.in/scripts/BS_NBFC List.aspx என்ற இணையதளத்தைப் பார்த்து அறிந்து கொண்டு அதன் பிறகு விளம்பரத்தை வெளியிடலாம். பொதுமக்களும் இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முறையாக வைப்புத் தொகை பெற அனுமதி பெற்றுள்ளதா என்பதை மேற்கண்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங் களை இந்திய ரிசர்வ் வங்கி, கோட்டைச் சரிவு, 16, ராஜாஜி சாலை, சென்னை-600 001. தொலைபேசி எண்: 044-25399029/25361910/25619758 என்ற முகவரியிலும், cepcchennai@rbi.org.in என்ற இ-மெயில் முகவரி மற்றும் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT