Published : 22 Nov 2021 06:56 PM
Last Updated : 22 Nov 2021 06:56 PM

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சுவாசப் பாதை தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது” என்று ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x