Published : 07 Mar 2016 08:44 AM
Last Updated : 07 Mar 2016 08:44 AM
பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக் கப்பட வேண்டும் என்கிற நோக்கத் தில் தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது மாற்று ஊடக மையத்தின் கலைக்குழு.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி 31-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தக் கலைக்குழுவின் பயணம் நேற்று (மார்ச்-6) சென்னையில் முடிவடைந் தது.
பறையோசை முழக்கத்தோடு தொடங்கிய இக்கலை நிகழ்ச்சியில், அடுத்ததாக ஒயிலாட்டம். பிறகு, நடைபெற்ற ‘சுதேசிகள்’ எனும் ஒருமணி நேர நாடகம் நம்மை அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது. பொதுத்துறைகளின் சிறப்புகள், அதிக வட்டி என்கிற கவர்ச்சி அறிவிப் போடு மக்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடிப்போகும் தனியார் நிதி நிறுவனங்களின் போக்குகள் என இன்றைய சமூக எதார்த்தத்தை நாடக காட்சிகள் அப்படியே பிரதிபலிக் கின்றன.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 நாட்டுப்புற கலைஞர்களை உள்ளடக்கிய இக்கலைக் குழுவி னருக்கு பயிற்சியளித்த மாற்று ஊடக மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ரா.காளீஸ்வரன் நம்மிடம் கூறியதாவது:
‘பொதுத்துறையைக் காப்போம்’ என்கிற முழக்கத்தோடு பயணப்பட்ட இக்கலைக் குழுவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு முதலில் பொதுத்து றையின் பயனையும், அவை தனியார் மயமானால் என்ன மாதிரியான விளை வுகள் ஏற்படும் என்பதையும் விளக் கினோம். நமது பாரம்பரிய கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடல் மற்றும் நாடகங்களைத் தயாரித்தோம். இந்த தயாரிப்புப் பணிக்கு ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகி யோர் கருத்துதவி புரிந்தார்கள் என்றார்.
இக்கலைக்குழுவின் தலைவரான ஆரோக்கியமேரி விண்ணரசி(29) கூறும்போது, “35 நாட்கள் பயணம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங் களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளோம். காலையில் பள்ளிக்கூடத் தில், மதியம் கல்லூரியில், மாலையில் மக்கள் கூடும் இடத்தில் என ஒரு நாளைக்கு 3 இடங்களில் நடத்தினோம். இதற்கு முன்பு அனை வரும் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுத்தறிவு கலைப் பயணம், வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டுமென்பதை வலியு றுத்தி சுகாதார கலைப்பயணம் சென்றி ருக்கின்றேன். பொதுத்துறை நிறுவனங்களை காக்க வேண்டும் என்கிற முழக்கத்தோடு சென்ற இந்த கலைப்பயணம் நானும் இந்த சமுதாயத்தில் ஒருத்தியாய், பொதுத்துறைகள் பாதுகாக்கப்பட ஏதாவது செய்தாக வேண்டுமென்கிற உத்வேகத்தை எனக்குள்ளும் தந்துள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT