Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளால் விசித்திரமான சட்டம், ஒழுங்கை சந்திக்கும் மதுரை மாநகர்: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

மதுரை

பழிவாங்கும் நோக்கில் நடந்துவரும் தொடர் கொலைகளால் மதுரை மாநகர் விசித்திரமான சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சந்தித்து வருவதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவ ருக்கும் ராஜபாண்டி கோஷ்டிக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக இரு கோஷ்டியைச் சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில ஆண் டுகளுக்கு முன்பு குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின், முக்கியக் குற்ற வாளியான மணிகண்டன் என்ற சின்னவாய் தலையைக் கொலை செய்ய குருசாமி தரப்பு திட்டமிட்டது. இதற்காக குருசாமிக்கு உதவிய முருகானந்தம் என்பவரை தூய மரியன்னை தேவாலயம் அருகே 15.11.2020-ல் மணிகண்டன் தரப்பு கொலை செய்தது.

இந்த வழக்கில் அழகுராஜா என்ற கொட்டு ராஜா(25), ராஜா(21) உட்பட 12 பேர் கைது செய்யப் பட்டனர். பின்னர் அழகுராஜா, ராஜா உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அழகுராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தாயார் வழிவிட்டாள், ராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ஆறுமுகத்தம்மாள் ஆகி யோர் உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: மதுரையில் கோஷ்டி மோதலால் பழிக்குப் பழியாக அடுத்தடுத்து கொலைகள் நடக் கின்றன. இதனால் மாநகரம் விசித்திரமான சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதில் ஒரு கொலையில் தொடர்பு டையவர்கள் தான் மனுதாரர்களின் மகன்கள். இந்த வழக்கில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதில் முன்நடத்தை அடிப்படையில் மனுதாரர்கள் மகன்கள் உட்பட 4 பேர் மட்டுமே குண்டர் சட்டத் தில் அடைக்கப்பட்டுள்ளனர். அதி காரிகள் தீர விசாரித்த பிறகே இந்த குண்டர் சட்ட உத்தரவை பிறப் பித்துள்ளனர். இதில் தலையிட வேண்டியதில்லை. மனுக்கள் தள் ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x