Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

தூங்கா நகரில் தூங்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டம்: தென் மாவட்ட மக்களின் கனவு கானல் நீராகிவிடுமோ?

மதுரை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணி களைத் தொடங்க தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத் தம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்து வமனை அமைக்கப்படும் என 2015-ல் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு குழப்பங்களால் `எய்ம்ஸ்’ கட்டுமானப் பணி தொடங்கவில்லை. இதனிடையே மத்திய அரசு, தற்காலிகமாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கான கட்டிட வாடகை, செலவினங்களை மத்திய அரசு தெளிவாகத் தெரிவிக்காததால் தமிழக அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

‘எய்ம்ஸ்’ குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல் வேறு தகவல்களைத் தொடர்ந்து பெற்று வரும் சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறியதாவது:

2015-ல் அறிவித்த மதுரை ‘எய்ம்ஸ்’ -க்கு ஜப்பான் நிறுவனம் இதுவரை கடன் வழங்காதது ஏன் எனத் தெரியவில்லை. 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்க்கு ஜூன் 2018-ல் தான் மதுரை தோப்பூரில் இடம் தேர் வானது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து எய்ம்ஸ்க்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

2019-ல் மக்களவைத் தேர்தல் நெருங்கிய வேளையில் ஜன வரியில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் ‘எய்ம்ஸ்’-க்கு நிதிக்காக ஜைக்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது.

அதன்பிறகு 8 மாதங்களைக் கடந்தும் பணிகள் தொடங்க வில்லை. வரைபடம் தயாராக 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.

தென் மாவட்ட மக்கள் பிரதிநி திகள் தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என்றார்.

மதுரை எம்பி சு.வெங்க டேசனிடம் கேட்டபோது, ஜைக்கா கடன் வழங்கத் தயாராக உள்ளது. தற்போது வரைபடம் தயாராகும் பணி நடக்கிறது. இப்பணி முடிந் ததும் நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கிவிடும். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x