Published : 18 Nov 2021 12:44 PM
Last Updated : 18 Nov 2021 12:44 PM
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் அமராவதி அணைக்கு வரும் மழை நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், உபரிநீர் வெளியேற்றபட்டுவருவதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை தொடர்மழை காரணமாக மொத்தமுள்ள 90 அடியில் 88 அடிவரை உயர்ந்து நிரம்பி உள்ளது
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழைக் காரணமாக 800 கணஅடி வரை அணைக்கு வந்துகொண்டிருந்த நீர் வரத்து நேற்று இரவு 2500 கண அடியாக அதிகரித்து வந்த்தோடு காலை நிலவரப்படி 4600 கண அடியாக மேலும் அதிகரித்து வந்துக் கொண்டிருக்கிறது
இதனால் அணையிலிருந்து 4183 கன அடிநீர் ஆற்றுபகுதி மற்றும் புதிய பாசன வாய்கால் வழியாக வெளியேற்றபட்டு வருகிறது
தொடர்ந்து மழை பொழிவு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துக் கொண்டிருப்பதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே கரையோர கிராம பகுதிமக்கள் ஆற்றுபகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க பொதுப்பணித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுவருகிறது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT