Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
முல்லை பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதிமுறையால் நிர்ணயித்த அளவு நீர்மட்டத்தை உயர்த்த முடி யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள கேரளாவின் நெருக்கடியால் முடியவில்லை.
2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான நீரே காரணம் என்று கேரளா குற்றம் சாட்டியது. இந்த நீர் பள்ளத்தாக்கில் வழிந்தோடி நேரடி யாக இடுக்கி அணையில் சேகர மாகிறது. எனவே அணை நீர் மூலம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
இருப்பினும் அணை நீரை நிலைநி றுத்துவதில் விதிமுறைகளை வகுக்க மத்திய நீர்வள ஆணையத்திடம் கேரளா முறையிட்டது. தமிழக பகுதிக்கு அதிகபட்சம் 4 ராட்சதக் குழாய்கள் மூலம் 1,600 கன அடி நீர் இரைச்சல் பாலம் வழியே 800 கனஅடி என மொத்தம் 2,400 கன அடி நீரைத்தான் வெளியேற்ற முடியும்.
142 அடியின்போது அணைக்கு அதிக நீர்வரத்து இருந்தால், உடன டியாக நீரை வெளியேற்ற முடியாது என்று வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையம் நீர்நிலை நிறுத்த விதிமுறைகளை (ரூல்கர்வ்) நடைமுறைப்படுத்தியது. இதன்படி, ஒவ்வொரு காலகட்டத்திலும் தேக்கக் கூடிய நீரின் அளவு நிர்ண யிக்கப்பட்டது. இதன்படி வரும் 20-ம் தேதி வரை 141 அடி அளவு நீரைத் தேக்கவும், பிறகு நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நவ.30-ல் 142 அடியாக உயர்த்தவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
எனவே சில வாரங்களாக 142 அடியை நீர்மட்டம் நெருங்கிய போதெல்லாம் விதிமுறைப்படி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத நிலை தொடர்ந்து கொண் டிருக்கிறது.
இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசா யிகள் சங்க இணைச் செயலாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், 152 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் ராம நாதபுரம் மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன. எனவே நீர்வள ஆணையம் இதனையும் அணை பயன்பாட்டு பாசன நிலமாக கணக்கிட்டு வரையறை செய்ய வேண்டும். இதன் மூலம் ரூல்கர்வ் விதிமுறையில் திருத்தம் செய்து கூடுதல் நீரை அணையில் தேக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT