Last Updated : 16 Nov, 2021 06:07 PM

 

Published : 16 Nov 2021 06:07 PM
Last Updated : 16 Nov 2021 06:07 PM

சாலை விபத்து வழக்கு: அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

கோவை

கோவையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட நடத்துநர் மற்றும் அவரது மகனுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.12.32 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ஆலப்பாளையத்தைச் சேர்ந்த தந்தை சம்பத்குமார், அவர்து 11 வயது மகன் கிருத்திக் இருவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசுப் பேருந்து நடத்துநரான சம்பத்குமார் மற்றும் அவரது மகன் கிருத்திக் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதுப்பாளையம் குளம் வளைவில் எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பத்குமாருக்கு இடதுகால் முட்டி, முழங்கால், இடது தொடையில் எலும்பு முறிவு, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. கிருத்திக்கின் வலது கால் நசுங்கியது.

இதனால் தனது அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல், வருவாய் இழப்பு ஏற்பட்டதால், தனக்கு ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், சிறுவன் கிருத்திக் தாக்கல் செய்த மனுவில் விபத்து நடந்தபோது தான் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்ததும், விபத்தால் படிக்க இயலாமல் போனதாலும், எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டதாலும் தனக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முனிராஜா, அரசுப் பேருந்து ஓட்டுநரின் அதிவேகம், கவனக்குறைவு, அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், விபத்தால் சம்பத்குமாருக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு, வலி, வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.2.52 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், கிருத்திக்கின் மருத்துவச் செலவு, வலி, வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.9.80 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க கோவை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x