Published : 12 Nov 2021 04:50 PM
Last Updated : 12 Nov 2021 04:50 PM

பேசும் படங்கள்: கனமழை பாதித்த பகுதிகளில் 6-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு செய்த காட்சி.

சென்னை

ஆறாவது நாளாக கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுப் பயணம் குறித்த படங்கள்:

காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர், மதனபுரத்தில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிடும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முடிச்சூர், சி.எஸ்.ஐ. செயின்ட் பால்ஸ் பள்ளி நிவாரண முகாமைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், அடையாறு ஜீரோ பாயிண்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தைப் பார்வையிட்டு, முதல்வர் ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர், ஆய்வு செய்யும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ்க்கோட்டையூரில் உள்ள தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினார்.
முடிச்சூர் டோல்கேட் அருகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப்
பொருட்களை முதல்வர் வழங்கினார்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் முதல்வர் ஆய்வு செய்தபோது, அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x