Published : 11 Nov 2021 09:45 PM
Last Updated : 11 Nov 2021 09:45 PM
பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதைகளில் 10 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, இராயபுரம் மண்டலம், வார்டு-52ல் உள்ள எம்.சி. சாலை சுரங்கப்பாதை, வார்டு-53ல் உள்ள ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, வார்டு-60ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, வார்டு-61ல் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70ல் உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94ல் உள்ள வில்லிவாக்கம் சுரங்கப்பாதை மற்றும் வார்டு-107ல் உள்ள ஹாரிங்டன் சுரங்கப்பாதை, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-134ல் உள்ள ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, வார்டு-136ல் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, வார்டு-135ல் உள்ள மேட்லி சுரங்கப்பாதை, வார்டு-142ல் உள்ள ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை மற்றும் பஜார் சாலை சுரங்கப்பாதை, அடையாறு மண்டலம், வார்டு-171ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அதிக அளவில் தேங்கியது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தச் சுரங்கப் பாதைகளில் இன்று காலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரானது வெளியேற்றப்பட்டு திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, இராயபுரம் மண்டலம், வார்டு-52ல் உள்ள எம்.சி. சாலை சுரங்கப்பாதை, வார்டு-53ல் உள்ள ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை மற்றும் வார்டு-60ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-70ல் உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை அண்ணாநகர் மண்டலம், வார்டு-94ல் உள்ள வில்லிவாக்கம் சுரங்கப்பாதை மற்றும் வார்டு-107ல் உள்ள ஹாரிங்டன் சுரங்கப்பாதை,, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109ல் உள்ள நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142ல் உள்ள ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை மற்றும் பஜார் சாலை சுரங்கப்பாதை ஆகிய 10 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டு போக்குவரத்து கூடிய விரைவில் சீர்செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT