Published : 11 Nov 2021 10:23 AM
Last Updated : 11 Nov 2021 10:23 AM
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விடிய விடிய இடைவிடாமல் கனமழை பெய்த நிலையில் மோசமான நிலை முடிந்துவிட்டதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்யும். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட சென்னை - ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனையொட்டி இதுவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் சராசரியாக 150 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. சில இடங்களில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
இன்று நீண்ட இடைவெளிகளிலேயே மழை பெய்யும். இன்றைக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அபாயகர சூழல் ஏதுமில்லை. காற்றும் மட்டும் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் புள்ளி வலுவிழந்ததாகக் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழையளவு: (mm)
தாம்பரம் - 233
சோழவரம் - 220
எண்ணூர்- 207
குமிடிபூண்டி- 184
ரெதில்ஸ் - 180
மாமல்லபுரம்- 169
ஆல்வார்பேட்- 162
நுங்கம்பாக்கம்- 157
டிஜிபி அலுவலகம் மயிலாப்பூர் - 157
பெரம்பூர்- 157
எம்ஆர்சி நகர்- 151
தாமரைப்பாக்கம்- 149
அம்பத்தூர்- 149
கே.கே.நகர்- 145
மீனம்பாக்கம்- 144
அயனாவரம்- 144
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (வானகரம்) - 142
தரமணி- 140
அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) - 139
கத்திவாக்கம் - 137
செம்பரம்பாக்கம்- 135
வில்லிவாக்கம் - 131
முகப்பேர் - 130
மணலி - 128
பொன்னேரி - 125
சத்யபாமா பல்கலைக்கழகம் (சோழிங்கநல்லூர்) - 124
ஆலந்தூர்- 121
அண்ணா நகர் - 120
தொண்டியார் பேட்- 120
கேளம்பாக்கம்- 119
திருப்போரூர் - 117
திருவொற்றியூர்- 115
திருக்கழுகுன்றம்- 113
மேற்கு தாம்பரம்- 111
செங்கல்பட்டு- 104
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 103
ஸ்ரீபெரும்புதூர்- 102
திருவள்ளூர்- 100
செய்யூர்- 100
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT