Published : 11 Nov 2021 09:21 AM
Last Updated : 11 Nov 2021 09:21 AM
சென்னையில் நேற்றிரவு தொடங்கி விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால்,11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. 7 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி நேற்று இரவு முதலே சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
11 சுரங்கப்பாதைகள் மூடல்:
மழை காரணமாக வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, காக்கன் சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
7 சாலைகளில் போக்குவரத்து தடை:
மேலும் மழைநீர் தேங்கியுள்ளதால் கே.கே.நகர் - ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை, ஈவிஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் - ஜவஹர் நகர், பெரவள்ளூர் - 70 அடி சாலை, புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு,வியாசர்பாடி - முல்லை நகர் பாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த மார்க்கத்தில் பயணம் செய்வோர் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT