Published : 10 Nov 2021 01:16 PM
Last Updated : 10 Nov 2021 01:16 PM
சென்னையில் கன மழைக்கான அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் வரும் நாட்களில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,
Ø மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என சுமார் 75,000 பேர்.
Ø மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை.
Ø சிறு படகுகளுடன் (Kayak) 350 கடலோரக் காவல் படை வீரர்கள்.
Ø நிலச்சரிவு போன்ற இடர்ப்பாடுகளைச் சரி செய்ய 250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படைக் குழுவினர்
Ø 10 மிதவைப் படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர்
எனத் தயார் நிலையில் உள்ளனர்.
அவசர உதவி எண்கள்:
பொது மக்கள் அனைவரும் கனமழையின்போது அவசர உதவிக்கு,
காவல்துறை 100,
தீயணைப்புத் துறை 101,
பொது எண் 112,
அவசர ஊர்தி 108,
காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044 24343662, 044 24331074, 044 28447701, 044 28447703 (தொலைநகல்),
சென்னை மாநகரக் காவல் பொது மக்கள் குறை தீர்ப்புப் பிரிவு எண் - 044 23452380
மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறை எண்- 044 23452359
ஆகியவற்றை அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT