Published : 07 Nov 2021 05:35 PM
Last Updated : 07 Nov 2021 05:35 PM

சேப்பாக்கம் - திருவல்லிகேணி மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட உதயநிதி

கனமழையால் பாதிப்படைந்த திருவல்லிகேணி - சேப்பாக்கம் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணிவர கனமழைநீடித்தது. கனமழை காரணமாக செம்பரபபாக்கம் ஏரியிலிருந்தும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட திருவல்லிகேணி, சேப்பாக்கம் உதய நிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழைநீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் லாக்நகர் கிளிமரம் பகுதி மக்களுக்கு வீடுவீடாக சென்று மதிய உணவு வழங்கினோம்.மழைநீரை வடியவைக்கும் பணி நடப்பதையும்,ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் அதுவரை தங்க கேட்டுக்கொண்டோம்.

தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியை கழகத்தினர்-மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x