Published : 07 Nov 2021 10:14 AM
Last Updated : 07 Nov 2021 10:14 AM

சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’- கொட்டித் தீர்க்கும் கனமழை

சென்னை

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு கன முதல் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்

சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை மாம்பலம், மைலாப்பூர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மிககனமழை பெய்ததால் சாலைகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதபோல் இன்று சென்னையின் முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது.

2015க்குப் பிறகு அதிக அளவில் பெய்துள்ள மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இன்று அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ..மீ., வில்லிவாக்கத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் கன முதல் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையின் அருகாமை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x